• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின் சக்தியில் இயங்கும் பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்காக அரசாங்க - தனியார் பங்குடமை கருத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கான பெறுகை
- மேல் மாகாணத்தை தழுவும் விதத்தில் இலங்கை போக்குவரத்து சபை சார்பில் போக்குவரத்தில் ஈடுபடுத்தும் பொருட்டு அரசாங்க - தனியார் பங்குடமை கருத்திட்டமொன்றாக மின் சக்தியில் இயங்கும் 50 மின்சார பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 2023‑02‑27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்தக் கருத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் நலன்களை உறுதிப்படுத்திக் கொண்டு இந்த பேருந்துகளின் மூலம் கூடுதலான வீதிகளில் பொது போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு இயலுமாகும் வகையில் உத்தேச கருத்திட்டத்தின் கீழ் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் மின் சக்தியில் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை சுமார் 200 வரை அதிகரிப்பது மிகப் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படும் மின் சக்தியில் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.