• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுகர்வோருக்கு நியாயமான விலையில் முட்டைகளை வழங்குவதன் பொருட்டு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்தல்
- உள்நாட்டு சந்தையில் முட்டை விலையினை நிலைப்படுத்தும் நோக்கில் இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூலம் முட்டைகளை இறக்குமதி செய்து உள்நாட்டு சந்தைக்கு வழங்குவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கிணங்க, விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட இந்தியாவின் 03 கம்பனிகளிடமிருந்து விலை ​கோரப்பட்டுள்ளது. இந்த விலைகளின் அடிப்படையில் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக எதிர்வரும் மூன்று (03) மாத காலத்திற்கு 92.1 மில்லியன் முட்டைகளை கொள்வனவு செய்யும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.