• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள பின்வரும் ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2023‑06‑02 ஆம் திகதியிடப்பட்டதும் 2334/47 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (அபிவிருத்தி கட்டுப்பாடு) ஒழுங்குவிதிகள்.

* 2023‑07‑07 ஆம் திகதியிடப்பட்டதும் 2339/31 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஆட்கள்) ஒழுங்குவிதிகள்.