• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுங்க இறக்குமதி வரியினைத் திருத்தும் பொருட்டு 03 கட்டளைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சந்தை விலையினை நிலைப்படுத்தல் உட்பட உள்நாட்டு விவசாயிகளுக்கு வசதிகளை ஏற்பாடு செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு சம்பந்தமான 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 04 கட்டளைகளும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் அரசாங்க வர்த்தமானியின் மூலம் வௌியிடப்பட்டுள்ளது. இந்த கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.