• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமானதும் தம்புள்ளையில் அமைந்துள்ளதுமான காணித்துண்டில் கமத்தொழில் சார்ந்த களஞ்சியசாலை மற்றும் கைத்தொழில் கருத்திட்டமொன்றுக்காக வழங்குதல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்தி செய்வதற்கு தனியார் துறை முதலீட்டாளர்களிடமிருந்து போட்டி அடிப்படையில் முதலீட்டு பிரேரிப்புகளைக் கோருவதற்கு 2020‑10‑19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்பு ஒன்றுக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான தம்புள்ளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள றூட் 03 பேர்ச்சர்ஸ் 17.75 விஸ்தீரணமுடைய காணித் துண்டை கமத்தொழில் சார்ந்த களஞ்சியசாலை மற்றும் கைத்தொழில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிலையியல் இணக்கப்பேச்சுக் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்தக் காணித் துண்டை 30 வருட காலப்பகுதிக்கு Dambulla Agro Cool Holdings (Pvt.) Ltd. கம்பனிக்கு குத்தகைக்கு அளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.