• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெதகம பாரம்பரிய வைத்திய கிராமத்தின் வைத்தியர்களுக்கு உறுதிகளை வழங்குதல்
- பாரம்பரிய உள்நாட்டு மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் சேவையை மெச்சுவதற்கும் உள்நாட்டு மருத்துவத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு துறைகளில் திறமைகளைக் காட்டும் மருத்துவர்களின் சேவையை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்கும் இயலுமாகும் வகையில் தொம்பே பிரதேச செயலாளர் பிரிவில் வெதகம மாதிரி கிராமம் தாபிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் 25 பாரம்பரிய வைத்தியர்கள் சார்பில் ஒருவருக்கு அண்ணளவாக ஒரு ஏக்கர் காணி வீதம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை அவர்களுக்கு குறித்து காணிகளின் உரிமையானது கையளிக்கப்படவில்லை. இந்த காணிகளுக்கு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளரின் பெயரில் உரித்து உறுதிகள் இருப்பது இந்தக் காணிகளின் உரிமையை பாரம்பரிய மருத்துவர்களுக்கு உடைமை மாற்றுவதற்கு பிரதான தடையாகவுள்ளது. உரிய காணிகளை பாரம்பரிய மருத்துவர்களுக்கு உடைமையாக்குவது சம்பந்தமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சட்டமா அதிபரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதோடு, அதற்கிணங்க நடவடிக்கை எடுத்து உரிய காணிகள் சார்பில் முறையான கொடைப் பத்திரங்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.