• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டார் தோஹா ஹமாட் சர்வதேச விமான நிலையத்திலும் குவைத் சர்வதேச விமான நிலையத்திலும் SriLankan Airlines சேவை சார்பில் விமான எரிபொருள் வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தங்களை வழங்குதல்
- SriLankan Airlines கம்பனி சார்பில் கட்டார் தோஹா ஹமாட் சர்வதேச விமான நிலையத்திலும் குவைத் சர்வதேச விமான நிலையத்திலும் விமான எரிபொருள் வழங்கும் ஒப்பந்தம் 2023‑10‑31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. அரசாங்க பெறுகை வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த இரண்டு (02) விமான நிலையங்களிலுமுள்ள விமான எரிபொருள் வழங்கும் நிறுவனங்களான Qatar Fuel Company மற்றும் Kuwait Aviation Fuelling Company ஆகிய கம்பனிகளிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு நேரடி ஒப்பந்தங்களாக கட்டார் தோஹா ஹமாட் சர்வதேச விமான நிலையத்திலும் குவைத் சர்வதேச விமான நிலையத்திலும் SriLankan Airlines கம்பனி சார்பில் விமான எரிபொருள் வழங்குநர்களுக்கு 24 மாத காலத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.