• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- பயணிகள் மோட்டார் வண்டிகள் மற்றும் சில தெரிவுசெய்யப்பட்ட பொருட்கள் சார்பில் இறக்குமதி கட்டுப்பாட்டினை தொடர்ந்தும் பேணி இறக்குமதி கட்டுப்பாடுக்காக விதிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளின் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மேலும் பொருட்கள் பலவற்றுக்குரிய இறக்குமதி கட்டுப்பாட்டினை நீக்குவதற்கு உரிய தரப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான ஏற்பாடுகளைச் செய்து 2023 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் 2023‑07‑20 ஆம் திகதியிடப்பட்டதும் 2341/38 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வௌிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் குறித்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.