• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கறுவா அபிவிருத்திக்காக புதிய திணைக்களமொன்றைத் தாபித்தல்
- சிறிய ஏற்றுமதி பொருளொன்றாக அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு கறுவா பயிர்ச் செய்கை வழங்கும் பங்களிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த பயிரை வர்த்தக பயிரொன்றாக மேம்படுத்தும் தேவை 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்பொன்றின் மூலம் மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கிணங்க கறுவா உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் தேவையான வசதிகளை வழங்குதல், கறுவா உற்பத்தியின் தரத்தினை விருத்தி செய்தல், பெறுமதி சேர்த்தல், உற்பத்தியினை பல்வகைப்படுத்தல் போன்ற பணிகள் சார்பில் கறுவா செய்கையாளர்கள், வழங்குநர்கள் அதேபோன்று ஏற்றுமதியாளர்கள் சார்பில் தேவையான வசதிகளை வழங்குவதற்கு கறுவா அபிவிருத்தி திணைக்களம் என்னும் பெயரில் புதிய திணைக்களமொன்றைத் தாபிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.