• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட வழிகாட்டல்கள்
- 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் 11(இ) ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த அலுவலகத்தின் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைவேற்றுவதற்கும் உரியதாக பின்பற்றவேண்டிய கொள்கைகள் உள்ளடக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் வழிகாட்டல்கள் காலத்திற்கு காலம் வௌியிடப்படுதல் வேண்டும். அதற்கிணங்க, சட்டமா அதிபரின் அவதானிப்புரைகள் மற்றும் சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உரிய வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த வழிகாட்டல்களுக்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.