• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான (101 ஆம் அத்தியாயம்) திருத்தம் (முன் வழக்கு விசாரணை கலந்தாய்வு)
- 2017 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவை (திருத்த) சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட முன் வழக்கு விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் புதிய ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தியதன் பின்னர், எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு மாற்று வழிகளை செய்வதற்கும், சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் தீர்ப்புகள் வழங்குவதற்காக எடுக்கப்படும் காலத்தை குறைப்பதற்கும் இயலுமாகும் வகையில் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையை திருத்துவதற்கு 2021‑09‑27 ஆம் திகதியன்று அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க சட்டவரைநரினால் உரிய திருத்த சட்டமூலமானது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.