• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் தேசிய அபிலாஷைகளையும் சர்வதேச நற்பெயரையும் மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மூலோபாய தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டம்
- உலகளாவிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் எதிர்கொள்ளப்படும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு இயலுமாகும் வகையில் இலங்கையின் நற்பெயரை சர்வதேச ரீதியில் மேம்படுத்திக் கொள்வதற்கும் சர்வதேச உறவுகளை பலப்படுத்தி சரியான வௌிநாட்டு கொள்கையொன்றை முகாமித்துக் கொள்ளும் பொருட்டும் மூலோபாய தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க இலங்கையின் தேசிய அபிலாஷைகளையும் சர்வதேச நற்பெயரையும் மேம்படுத்துவதற்கு வெகுசன ஊடக அமைச்சும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் ஒருங்கிணைந்து தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சரினாலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.