• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை முதலீட்டுச் சபைக்கும் (BOI) Hambantota Oil Refinery (Pvt) Ltd நிறுவனத்துக்கும் இடையிலான உடன்படிக்கை
- ஏற்றுமதி சந்தை சார்பில் மாத்திரம் நாளொன்றுக்கு 420,000 பெரல் ஆற்றல் கொண்ட பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையமொன்றை அம்பாந்தோட்டை பிரதேசத்தில் தாபிப்பதற்கு இலங்கை முதலீட்டுச் சபைக்கும் (BOI) Hambantota Oil Refinery (Pvt) Ltd நிறுவனத்துக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு 2019‑09‑17 ஆம் திகதியன்று அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 50 வருட நீண்டகால குத்தகை அடிப்படையில் 1,200 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயினும் கருத்திட்ட பிரேரிப்பாளர் உரிய காணியை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளாததோடு, கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுமில்லை. கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக கருத்திட்ட பிரேரிப்பாளருக்கு பல தடவை எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டபோதிலும் அது தொடர்பில் எவ்வித பதிலும் முன்வைக்கப்பட வில்லை. இரு தரப்புக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை யிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் கருத்திட்ட பிரேரிப்பாளர் நடவடிக்கை எடுக்காததன் காரணமாக குறித்த இந்த உடன்படிக்கையினை இரத்துச் செய்வ தற்கு முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.