• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க கிருமிநாசினிகள் கட்டுப்பாட்டு சட்டத்தை திருத்துதல்
- கிருமிநாசினிக் கைத்தொழில் உலகளாவிய ரீதியில் நிலவும் ஒழுங்குறுத்துகை முன்னுரிமை மற்றும் அதிகரித்துவரும் சட்டவிரோத செயற்பாடுகள் சம்பந்தமாக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் விதத்தில் 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க கிருமிநாசினிகள் கட்டுப்பாட்டு சட்டத்தை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்ட விரோத கிருமிநாசினிகளை சுற்றாடல் நட்புறவுமிக்க விதத்தில் அழிப்பதற்காக செலவிடப்படும் அரசாங்க நிதியினை குற்றவாளி களிடமிருந்து அறவிடுதல், குற்றவாளிகளினால் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் பொருட்டிலான நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகளை பலப்படுத்துதல் அடங்கலாக ஏற்புடையதான ஏனைய ஏற்பாடுகளுடனான சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.