• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொள்கலன் நிலைய இயக்குபவர்களை ஒழுங்குறுத்துவதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
– 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் முகவர்களுக்கு, கப்பற் சரக்குகளைக் கொண்டு செல்பவர்களுக்கு, இயந்திர இயக்குநர்கள் அல்லாத பொது தொழிற்பாட்டாளர்களுக்கு மற்றும் கொள்கலன் தொழி்ற்பாட்டாளர்களுக்கு உரிமப்பத்திரம் வழங்கும் சட்டம் பல சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளதோடு, இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் கொள்கலன் நிலைய இயக்குபவர்களை "சேவை வழங்குநர் ஒருவராக" கருதி ஒழுங்குறுத்த வேண்டியுள்ளது. அதற்கிணங்க நடவடிக்கை மேற்கொள்ளும்போது நவீன வர்த்தகம், சரக்குகளை ஏற்றுதல் மற்றும் விநியோக சேவைகளின் தேவைகள் தொடர்பாக கொள்கலன் நிலைய இயக்குபவர்களின் அபிவிருத்தி மற்றும் அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளின்பால் பாதகமான விதத்தில் தாக்கம் செலுத்துகின்றமை தெரியவந்துள்ளது. ஆதலால், கொள்கலன் நிலைய இயக்குபவர்களினால் பேணிவரும் தொழில்முயற்சிகளின் ஒழுங்குறுத்தல், கட்டுப்பாடு, கட்டணங்கள் மற்றும் கட்டண விகிதாசாரங்களை தீர்மானித்தல், கட்டணங்களை விதித்தல் மற்றும் சேர்த்தல் என்பன பொருட்டிலான ஏற்பாடுகளுடன் கூடிய புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் அதற்காக சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.