• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்திலும் இந்தோனேஷியாவின் ஜகர்த்தா சர்வதேச விமான நிலையத்திலும் SriLankan Airlines கம்பனியின் விமானங்கள் சார்பில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
- SriLankan Airlines கம்பனியினால் இந்தியாவின் கொச்சின் மற்றும் இந்தோனேஷியாவின் ஜகர்த்தா ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் விமானப் பயணிகள், விமானத்திற்கான நடமாடும் உயர்த்திகள் மற்றும் சரக்குகளைக் கையாளுதல் போன்ற மூன்று துறைகளுக்கும் சேவை வழங்குநர்களை தெரிவு செய்யும் பொருட்டு கேள்வி கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் சேவை வழங்கும் ஒப்பந்தத்தை AI Airport Services Limited நிறுவனத்திற்கும் ஜகர்த்தா சர்வதேச விமான நிலையத்தில் சேவை வழங்கும் ஒப்பந்தத்தை PT. Gapura Angkasa நிறுவனத்திற்கும் வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.