• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிங் கங்கை வௌ்ளப்பெருக்கு காரணமாக அடிக்கடி பாதிக்கப்படும் மக்களுக்கு ஏற்படும் சேதத்தினை தவிர்ப்பதற்கு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- கிங் கங்கை வௌ்ளப்பெருக்கு காரணமாக அடிக்கடி பாதிக்கப்படும் மக்களுக்கு ஏற்படும் சேதத்தினை தவிர்ப்பதற்கு நிரந்தர தீர்வொன்றினை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதன்பொருட்டு சாத்தியத்தகவாய்வொன்றினை மேற்கொள்வதற்காக MCC - Sinohydro Consortium நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.