• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் பணிகளை முறைப்படுத்துதலும் வினைத்திறன் மிக்கதாக்குதலும்
- திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் நியமனம் கோரளை அடிப்படையில், நகர பிரிவு அடிப்படையில் மற்றும் வைத்தியசாலைகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றமையினால் உரிய அதிகார வரையறை எல்லை திட்டவட்டமாக இனங்காண முடியாததன் காரணமாக திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது பொதுமக்கள் சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி நேரிட்டுள்ளது. அதேபோன்று நீண்டகாலமாக திடீர் மரணவிசாரணை அதிகாரிகளுக்கான நியமனம் வழங்கப்படாமையினால் சில மாவட்டங்களில் பாரிய அளவில் வெற்றிடங்கள் நிலவுகின்றதன் விளைவாகவும் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளைத் தீர்த்து பொதுமக்களுக்கு வினைத்திறன் மிக்கதும் முறையானதுமான சேவையினை வழங்கும் நோக்கில் திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிப்பதற்கான தகைமைகள், அவர்களுடைய பொறுப்புக்கள் மற்றும் பணிகள் அடங்கலான ஏற்பாடுகளை தௌிவாகக் குறிப்பிடப்பட்டு நிலையியல் நடவடிக்கைமுறைவிதியானது நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைமுறைவிதியிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள அனைத்து திடீர் மரண விசாரணை அதிகாரிகளையும் பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இனங்காணப்பட்ட வைத்தியசாலைகள் சார்பில் இணைப்பதற்கும் இருமொழி செயலாளர் பிரிவு சார்பில் இருமொழி தேர்ச்சிமிக்க திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிப்பதற்கும் தொடர்ந்தும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிதாக ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் உரியதாக தனது அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ள தொடர் வேலைத்திட்டம் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, குறித்த வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.