• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வௌியிடப்பட்ட கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வசதியளித்தல், சீமெந்து மற்றும் அது சார்ந்த உற்பத்தியின் இறக்குமதியின் மூலம் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளல் என்னும் எதிர்பார்ப்பில் சீமெந்து உற்பத்திக்குத் தேவையான இடைநிலை பொருளொன்றான கிளிங்கர் மற்றும் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குள்ள சீமெந்து இறக்குமதியின் போது அறவிடப்படும் செஸ் வரியினை அதிகரிக்கும் பொருட்டு 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளையொன்று வௌியிடப்பட்டுள்ளது. 2023‑06‑16 ஆம் திகதியிடப்பட்டதும் 2336/71 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள குறித்த கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.