• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கும் மக்கள் சீன குடியரசின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக நிறுவனத்திற்கும் இடையில் உரிமப்பத்திர உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் மக்கள் சீன குடியரசின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக நிறுவனத்திற்கும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் நிகழ்ச்சித்திட்டங்களை பரிமாறிக் கொள்வதற்கான உரிமப்பத்திர உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க குறித்த நோக்கம் கருதி தயாரிக்கப்பட்டுள்ள உரிமப்பத்திர உடன்டிக்கையில் இரு தரப்பினரும் கைச்சாத்திடும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.