• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புகையிரத திணைக்களத்தை மீளக் கட்டமைத்தல்
- அரசாங்கத்தின் A தர திணைக்களமொன்றாக வகுப்பீடு செய்யப்பட்டுள்ள, பயணிகள் போக்குவரத்து அதேபோன்று பொருட்கள் கொண்டு செல்லல் ஆகிய இரு சேவைகளையும் வழங்கும் இலங்கை புகையிரத திணைக்களத்தின் நிர்வாக, நிதி மற்றும் செயற்பாட்டு பணிகள் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளை குறைத்து, சேவைகளை சிறந்த மட்டத்தில் வழங்குவதனை பேணுவதற்காக இந்த திணைக்களத்தை மீளக் கட்டமைப்பது அத்தியா வசியமானதென இனங்காணப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு இந்த திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினர்களினதும் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கிணங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மிகப் பொருத்தமான மாதிரியின் கீழ் இந்த திணைக்களத்தை மீளக் கட்டமைப்பது சம்பந்தமாக பொருத்தமான பிரேரிப்புகளை சமர்ப்பிக்கும் பெருட்டு உரிய விடயம் சார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.