• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய ஐந்தாவது சுற்று கலந்துரையாடல்
- உத்தேச இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய ஐந்தாவது சுற்று கலந்துரையாடல் 2023‑06‑26 ஆம் திகதியிலிருந்து 2023‑06‑28 ஆம் திகதி வரை கொழும்பில் நடாத்தப்பட்டது. சுங்க ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக இலகுபடுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு அதேபோன்று துப்பரவேற்பாடு மற்றும் தாவரநலச் சான்று போன்ற விடயங்கள் சம்பந்தமான கலந்துரையாடல்கள் இந்த சுற்றின் போது முற்றாக்கப்பட்டுள்ளது. உத்தேச உடன்படிக்கை சம்பந்தமான செயற்பாட்டுத்திட்டத்திற்கு அமைவாக 2024 பெப்ரவரி மாதமளவில் உரிய கலந்துரையாடல்களை பூர்த்தி செய்வதற்கும் 2024 மார்ச் மாதமளவில் உடன்டிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய ஐந்தாவது சுற்று கலந்துரையாடலின் முன்னேற்றம் சம்பந்தமான தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.