• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தங்கள்
- உள்நாட்டு அரசாங்க படுகடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு வசதியளிக்கும் பொருட்டு ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், ஓய்வூதிய நிதியம் அல்லது பணிக்கொடை நிதியம் மற்றும் இதற்கு சமமான நிதியங்களினால் திறைசேரி முறிகளில் முதலீடு செய்து ஈட்டப்படும் வருமானத்தின் மீது அறவிடப்படும் வருமான வரி விகிதாசாரத்தை மாற்றுவதற்காக 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு உரிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக 2023‑06‑28 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.