• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கு வருகைதரும் வௌிநாட்டு கப்பல்கள் மற்றும் வௌிநாட்டு அரசாங்க அல்லது இராணுவ விமானங்கள் சார்பில் இராஜதந்திர ரீதியில் அனுமதி வழங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட செயற்பாட்டு நடவடிக்கைமுறையொன்றை அறிமுகப்படுத்துதல்
- இந்து சமுத்திரத்தில் இலங்கையின் புவியியல் ரீதியிலான அமைவிடம் காரணமாக வௌிநாட்டு கப்பல்கள் மற்றும் வௌிநாட்டு அரசாங்க அல்லது இராணுவ விமானங்கள் இலங்கைக்கு அடிக்கடி வருகைதருகின்றன. அதேபோன்று வௌிநாடுகளும் சாத்தியமான சர்வதேச அமைப்புகளும் இலங்கையின் கண்டபடுகையில் சமுத்திரம்சார் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் அக்கறை காட்டுகின்றன. இந்த நிலைமையின் மீது குறித்த பணிகளுக்கு இராஜதந்திர ரீதியிலான அனுமதிகளை வழங்குதற்கு இயலுமாகும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட செயற்பாட்டு நடவடிக்கை முறையினை வகுக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சகல தரப்பினர்களுடனும் உசாவுதலைச் செய்து, தயாரிக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட செயற்பாட்டு நடவடிக்கை முறையானது பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அதன் பொருட்டு அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.