• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான யப்பான் உதவி நிகழ்ச்சித்திட்டம் - 2023
- யப்பான் உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 4 ஆவது கால அட்டவணையின் 2 ஆ வது குழு சார்பில் 284 மில்லியன் யப்பான் யென்களை (சுமார் 611 மில்லியன் ரூபா) வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, குறித்த கொடையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு யப்பான் அரசாங்கத்துடன் பரிமாற்றல் கடிதங்களை கைச்சாத்திடுவதற்கும் யப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்துடன் உடன்டிக்கையினை கைச்சாத்திடுவதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.