• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நேபாளம் கத்மண்டு விமானநிலையத்தில் SriLankan Airlines விமான சேவை சார்பில் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை வழங்குதல்
- கத்மண்டு விமான நிலையத்தில் SriLankan Airlines விமான சேவை சார்பில் எரிபொருள் விநியோகிக்கும் தற்போதைய ஒப்பந்தம் 2023‑08‑31 ஆம் திகதியன்று முடிவடையவுள்ளது. புதிய விமான எரிபொருள் வழங்குநர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு வரையறுக்கப்பட்ட சர்வதேச பெறுகை வழிமுறையின் கீழ் கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு விலை முன்வைப்பொன்று மாத்திரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசினை அடிப்டையாகக் கொண்டு, உரிய ஒப்பந்தத்தை அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த ஒரே கேள்விதாரரான Associated Energy Group LLC நிறுவனத்திற்கு இரண்டு (02) வருட காலத்திற்கு வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.