• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை உலகளாவிய உயிரியல் எரிபொருள் கூட்டணியில் ஆரம்ப உறுப்பினராக இருத்தல்
- இந்தியா G20 அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்று செயலாற்றிய காலப்பகுதியில் உலகளாவிய உயிரியல் எரிபொருள் கூட்டணியினைத் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக 2023 பெப்ரவரி மாதத்தில் நடாத்தப்பட்ட இந்திய வலுசக்தி வாரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான உயிரியல் எரிபொருள் உற்பத்தியாளர்களும் மற்றும் நுகர்வோர்களுமான பிரேசில், இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் ஏனைய அக்கறையுள்ள நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கும் வலுசக்தி துறையில் மற்றும் விசேடமாக போக்குவரத்தின் போது நிலைபேறுடைய உயிரியல் எரிபொருள் பாவனையை ஊக்குவிப்பதற்கும் உத்தேச கூட்டணியின் கீழ் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று உலகளாவிய உயிரியல் எரிபொருள் வர்த்தகத்திற்கு வசதியளித்தல், கொள்கை அபிவிருத்திக்கான சிறந்த பயன்பாடுகளைப் பரிமாறிக் கொள்தல் மற்றும் உலகம் முழுவதுமுள்ள உயிரியல் எரிபொருள் பயன்பாட்டிற்கு தொழிநுட்ப ஒத்துழைப்பினை வழங்குதல் மூலம் சந்தைகளை அபிவிருத்தி செய்தல் அதேபோன்று பலப்படுத்துதல் என்பவற்றின்பால் உத்தேச கூட்டணி கவனம் செலுத்தும். இந்த புதிய கூட்டணியில் சேர்வதற்கு இந்தியா சகலரினதும் உடன்பாட்டினை எதிர்பார்க்கின்றதோடு, இந்தக் கூட்டணியின் ஆரம்ப உறுப்பினராவதற்கு அடிப்டை ஆவணத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கிணங்க, இலங்கை உலகளாவிய உயிரியல் எரிபொருள் கூட்டணியின் ஆரம்ப உறுப்பினராகும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.