• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய சிறைச்சாலைகள் நிர்வாக சட்டமூலம்
- 1877 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் மூலம் இலங்கையில் சிறைச்சாலைகள் முறைமையானது நிருவகிக்கப்படுகின்றதோடு குறித்த கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் சமகால தேவைகளுக்கு போதுமனவையல்ல என்பது தெரியவந்துள்ளது. அதேபோன்று இலங்கை கட்டுப்பட்டுள்ள சர்வதேச சட்டப் பொறுப்புக்கள் மற்றும் தரங்களுக்கும் குறித்த கட்டளைச்சட்டத்திலுள்ள சில ஏற்பாடுகள் அமைவானதாக இல்லை. ஆதலால், புதிய சிறைச்சாலைகள் நிர்வாக சட்டமொன்றை அறிமுகப்படுத்தும் தேவையின் மீது அப்போதைய நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட சட்ட மறுசீரமைப்புக் குழுவினால் அதற்கான ஆரம்ப வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப வரைவினை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.