• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் சார்பில் புறப்படுதல் வரி சலுகையினை நீடித்தல்
- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு இந்த விமான நிலையத்தில் சர்வதேச விமான கம்பனிகளினால் செலுத்தவேண்டிய புறப்படுதல் வரியிலிருந்து 50 சதவீதத்தை மாத்திரம் ஆறு (06) மாத காலப்பகுதிக்கு அறவிடும் பொருட்டு 2022‑12‑19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த சலுகை காலப்பகுதி 2023‑07‑11 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு ஏற்கக்கூடிய விலையில் விமான பயணசீட்டுக்களின் விலையினை தீர்மானிப்பதற்கு இயலுமாகும் வகையில் புறப்படுதல் வரியிலிருந்து 50 சதவீதத்தை மாத்திரம் அறவிடும் கால எல்லையை மேலும் ஆறு (06) மாதங்களால் நீடிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.