• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர் மற்றும் மலக்கழிவகற்றல் கட்டணங்களைத் திருத்துதல்
- பாதுகாப்பான நீர் மற்றும் துப்பரவேற்பாட்டுக்கான அணுகல் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், சேவையின் தரத்தை விருத்தி செய்தல் மற்றும் நிலைபேறுடைய நீர் வள பயன்பாட்டினை நடைமுறைப்படுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு இயலுமாகும் வகையில் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் நிதி நிலைமை மற்றும் நிலைபேறுடைய தன்மையினை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியுள்ளது. அதற்கிணங்க நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு குறைந்த வருமானம் பெறும் குழுக்களுக்கு கல்வி, மத மற்றும் பொது நீர் விநியோகம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு அடிப்படையின் மீது ஆகக்குறைந்த தாக்கத்தினை செலுத்தக்கூடிய விதத்தில் நீர் மற்றும் மலக்கழிவகற்றல் கட்டணங்களைத் திருத்தும் பொருட்டு அங்கீகாரம் வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.