• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், Canwill Holdings (Pvt) Ltd. (Hyatt), Hotel Developers Lanka Ltd. (Hilton) மற்றும் Litro Gas Lanka Ltd. ஆகிய கம்பனிகளின் கொடுக்கல் வாங்கல் ஆலோசகர்களை தெரிவுசெய்தல்
- 2023‑03‑13 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்போந்த கம்பனிகளை மறுசீரமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த நோக்கம் கருதி கொடுக்கல் வாங்கல் ஆலோசகர்களை தெரிவுசெய்யும் பொருட்டு சர்வதேச ரீதியில் போட்டிகரமான பெறுகை வழிகாட்டலைப் பின்பற்றி அபிப்பிராய வௌிப்படுத்தல் மற்றும் பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் குறுகிய படடியலிடப்பட்ட பிரேரிப்புகளிலிருந்து தரம் மற்றும் செலவு அடிப்டையில் தெரிவுசெய்யும் வழிமுறையினைப் பின்பற்றி மேற்குறிப்பிட்ட 04 கம்பனிகளுக்கும் கொடுக்கல் வாங்கல் ஆலோசகர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கிணங்க, தெரிவுசெய்யப்பட்ட பின்வரும் கொடுக்கல் வாங்கல் ஆலோசகர்களுடன் உரிய உடன்டிக்கைகளைச் செய்துகொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(i) வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் - Alvarez and marsal

(ii) Canwill Holdings (Pvt) Ltd. (Hyatt) - Deloitte India

(iii) Hotel Developers Lanka Ltd. (Hilton) - Colliers Singapore

(iv) Litro Gas Lanka Ltd. - Deloitte India