• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதியோர் உதவி கொடுப்பனவு பெறுபவர்கள், காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோய்க்கான உதவி கொடுப்பனவு பெறுபவர்கள் மற்றும் உதவி பெறும் மாற்று திறனாளிகள் சார்பில் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவினை வழங்குதல்
- “அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இனங்காணப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் பெயர் பட்டியல் ஏற்கனவே மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை முன்வைக்கும் பொருட்டு பிரதேச செயலாளர் அலுவலக மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள முதியோர் உதவி கொடுப்பனவு பெறுபவர்கள், காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோய்க்கான உதவி கொடுப்பனவு பெறுபவர்கள் மற்றும் உதவி பெறும் மாற்று திறனாளிகள் என்போர் மிகப் பொருத்தமான தகவுத்திறன்கள் மற்றும் அளவுகோள்களை அடிப்டையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும் வரை இதுவரை நன்மைகளைப் பெற்றுக் கொண்டிருந்த குறித்த 03 சமூக பிரிவுகள் சார்பிலும் தற்போது வௌிப்படுத்தப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நலன்புரி நன்மைகள் கொடுப்பனவினை செலுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.