• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக்கான பிரதான திட்டத்தை தயாரித்தல்
- பிரதான அபிவிருத்தி மையங்கள் சார்பில் பாரிய அம்பாந்தோட்டை பிராந்திய மாதிரி திட்டமொன்றையும் விரிவான பிரதான திட்டமொன்றையும் தயாரிக்கும் பொருட்டு மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பணிகளை Surbana Jurong (Private) Limited கம்பனிக்கு கையளிப்பதற்கு 2018‑06‑26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் குறித்த இந்த தீர்மானத்தின் பிரகாரம் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு, கொழும்பு நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கிழக்கு மாகாண திறமுறை சுற்றுலா வலய அபிவிருத்தி என்பன பொருட்டு பிரதான திட்டத்தை தயாரிப்பதற்கான பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ள Surbana Jurong (Private) Limited கம்பனிக்கு அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக்கான பிரதான திட்டத்தை தயாரிக்கும் பணியையும் கையளிப்பது மிகப் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க இந்தப் பணியினை Surbana Jurong (Private) Limited கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.