• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்தல்
- அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் பட்ட பாடநெறிகளை கற்பதற்காக வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்துக் கொள்வதற்கு 2023‑04‑24 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியினால் முழு கடன் காலப்பகுதியின் சார்பில் 13 சதவீதம் கொண்ட ஆகக்குறைந்த வட்டி விகிதாசாரத்தை பேணி குறித்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தர பெறுபேற்றின் மீது பட்டப் பாடநெறிகளை கற்பதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களிலிருந்து உரிய தகைமைகளை பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் சார்பில் 07 ஆவது குழுவின் கீழ் வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.