• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 ஆம் நிதி ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் வரையறையினைத் திருத்துவதற்கான சட்டமூலம்
- 2023 ஆம் நிதி ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் வரையறையினைத் திருத்துவதற்கு 2023‑06‑28 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநரினால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.