• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித் துறை சட்டத்தின் 29அ ஆம் பிரிவின் (2) உபபிரிவின் கீழான கட்டளை
- சிறு உரிமைகள் நீதிமன்றத்திற்கு தனித்துவமான மூலக்குடியியல் நீதிமன்ற அதிகார வரம்புள்ள ஏழாவது அட்டவணையில் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள சகல வழக்குகளிலும் நிதி பெறுமதியானது நீதி என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் காலத்திற்கு காலம் விதித்துரைக்கப்பட வேண்டும் என்னும் ஏற்பாடானது 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித் துறை சட்டத்தின் 29அ ஆம் பிரிவின் (2) உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்றத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள வட்டி தவிர 1.5 மில்லியன் ரூபா வரையிலான நிதி பெறுமதியை வட்டி தவிர 2 மில்லியன் ரூபா அல்லது 2 மில்லியன் ரூபாவை மிஞ்சுதலாகாது என்னும் கட்டளையை நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் 2023‑04‑21 ஆம் திகதியிடப்பட்டதும் 2328/16 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌியிட்டுள்ளார். குறித்த கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.