• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் (வான்வழிச் செலுத்துகை மற்றும் விமான சேவைகள் பாதுகாப்பு) வழங்குநர்களுக்கு உரிமப் பத்திரம் வழங்கும் ஒழுங்குவிதிகள்
- சர்வதேச சிவில் விமான சேவைகள் சமவாயத்தின் இணைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள தர நியதிகள் மற்றும் சிபாரிசுகளுக்கு அமைவாக இலங்கையில் விமானவியல் மற்றும் விமான வான் பரப்பில் பாதுகாப்பான விமான பயணிகளின் கையாள்கை பணிகளை உறுதி செய்வதற்கு இயலுமாகும் வகையில் வான் வழிச் செலுத்துகை மற்றும் விமான பாதுகாப்பு சேவைகள் வழங்கப்படுவதை ஒழுங்குறுத்தும் பொருட்டு 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் (வான்வழிச் செலுத்துகை மற்றும் விமான சேவைகள் பாதுகாப்பு) வழங்குநர்களுக்கு உரிமப் பத்திரம் வழங்கும் ஒழுங்குவிதிகள் 2023-04-03 ஆம் திகதியிடப்பட்டதும் 2326/16 ஆம் இலக்கத்தைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.