• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தை மீளக் கட்டமைத்தல்
- கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் தாபிக்கப்பட்ட போது எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்கள் நிறைவேறாமையினாலும் இந்த நிறுவனத்தினால் பொருளாதாரத்திற்கு பயனுள்ள வகையில் பங்களிப்பு கிடைக்கப்பெறாமை போன்ற விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தை மீளமைக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தை மீளக் கட்டமைப்பதற்கு உரிய பணிகளை நிறைவேற்றும் பொருட்டு செயற்பாடு மற்றும் மேற்பார்வை குழுவொன்றை நியமித்து உத்தேச மீள் கட்டமைப்பு செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.