• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செய்மதி தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, எண்ணெய் கசிவு அவதானிப்பு சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குரியதாக புரிந்துணர்வு உடன்படிக்கையினைச் செய்துகொள்ளல்
- கப்பல் தொழிலின் அபிவிருத்தி மற்றும் துறைமுகங்களின் அபிவிருத்தி என்பன காரணமாக இலங்கை நீர்பரப்பில் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் கப்பல்களின் மூலம் ஏற்படும் எண்ணெய் கசிவு தொடர்பில் விரைவாக தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிமுறையொன்றை தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இத்தகைய வழிமுறையொன்று இருப்பது கப்பல்களினால் ஏற்படும் கடல் மாசடைதலை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அதற்காக பொறுப்பு கூறவேண்டிய கப்பல்களை இனங்காண்பதற்கும் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். அதற்கிணங்க, முன்னோடி கருத்திட்டமொன்றாக பிரான்ஸ் பொருளாதார மற்றும் நிதி அமைச்சினால் 601,810 யூரோக்களை கொடையாக Collected Localization Satellites (CLS) நிறுவனத்தின் ஊடாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு கைச்சாத்திடப்படவுள்ள உத்தேச வரைவு புரிந்துணர்வு உடன்டிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த புரிந்துணர்வு உடன்டிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.