• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இற்றைப்படுத்தப்பட்ட தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கை மற்றும் திட்டம் - 2048
- இலங்கையின் தேசிய பௌதிக திட்டத்தை இற்றைப்படுத்துவதற்கு 2020‑01‑02 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் செய்யப்பட்ட அரச கொள்கை கூற்று மற்றும் வரவுசெலவுத்திட்ட உரை என்பவற்றின் மூலம் முன்வைக்கப்பட்ட பிரேரிப்புகள் அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்பு மற்றும் பல்வேறுபட்ட நிறுவனங்களின் மூலம் இற்றைப்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கங்களுக்கிடையிலான குழு அறிக்கை - 2021 என்பவற்றை அடிப்டையாகக் கொண்டு, 2000 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க நகர, கிராம நிர்மாண (திருத்த) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக தாபிக்கப்பட்டுள்ள கைத்தொழில் மதியுரை குழுவின் ஆலோசனைகள் மற்றும் உரிய சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடன் "தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கை மற்றும் திட்டம் - 2048” தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தேசிய பௌதிக நிர்மாணிப்பு தொடர்பிலான அமைச்சுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு குழுவினதும் தேசிய பௌதிக நிர்மாணக் குழுவினதும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டதும் இற்றைப்படுத்தப்பட்டதுமான தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கை மற்றும் திட்டம் - 2048 ஐ நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.