• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய நீர் வளங்கள் கொள்கை மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவ பொறிமுறை
- கடந்த ஒரு தசாப்த காலமாக நிலவிய கடும் காலநிலை மாற்ற நிலைமைகள் காரணமாக தற்போது உலகின் காலநிலை மாற்றங்களினால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் குழுவில் இலங்கையும் உள்ளது. இந்த நிலைமையின் மத்தியில் படிப்படியாக நாட்டின் வறண்ட பிரதேசங்களுக்கு பருவ மழையினால் கிடைக்கப்பெறும் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதோடு, ஈரவலய பிரதேசங்களுக்கு கிடைக்கும் மழைவீழ்ச்சி அதிகரித்துள்ள போக்கினால் எதிர்பாராத விதத்தில் கடும் வறட்சியான நிலைமைக்கும் அதேபோன்று வௌ்ளப்பெருக்கு நிலைமைக்கும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. கட்டுப்படுத்தமுடியாத விதத்தில் ஏற்படும் இத்தகைய காலநிலை மாற்றத்தைக் கொண்ட பின்னணியில் குடிநீர், நீர்ப்பாசனம், வலுசக்தி மற்றும் சேவை என்பவற்றிற்கான தேவையின் நிமித்தம் நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் வளத்தை பயனுள்ள விதத்தில் முகாமித்தல் கடும் பிரச்சினையான செயற்பாடொன்றாக மாறியுள்ளது. ஆதலால், நடைமுறை ரீதியிலான நீர் வளங்கள் கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவது முக்கிய தேசிய தேவையொன்றாக உள்ளது. அதற்கிணங்க, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் (திரு) சீ.எம்.மத்தும பண்டாரவின் தலைமையில் உரிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் பிரதம அமைச்சரின் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய நீர் வளங்கள் கொள்கை மற்றும் செயற்பாட்டு முகாமைத்து பொறிமுறை மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, அதன் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.