• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்தோனேசியாவுடன் செய்துகொள்ளப்படவுள்ள முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை
- தென்கிழக்காசியாவின் பாரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தோனேசியா இலங்கைக்கு பயனுள்ள வர்த்தக உறவுகளை கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான தோற்றுவாய்களைக் கொண்ட வர்த்தக பங்குதாரராக இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அந்நாட்டுடன் நீண்டகால சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினைச் செய்துகொள்ளும் நோக்கில் அதன் ஆரம்ப கட்டமாக முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையினை செய்துகொள்ளும் பொருட்டு கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.