• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தல்
- விசேட வர்த்தக பொருள் வரியினை விதிப்பதன் மூலம் கோதுமை மா இறக்குமதி உரிமபத்திர வழிமுறையினை மீண்டும் தாபிப்பதற்காக 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் 2023 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதியானது 2023‑06‑14 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதியை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.