• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023/2024 மற்றும் 2024/2025 காலப்பகுதியின் சார்பில் தாய் கப்பல்களிலிருந்து லக்விஜய மின் நிலையத்தின் இறங்குதுறை வரை நிலக்கரி ஏற்றி இறக்கும் பொருட்டு இலகுரக படகுகளை பயன்படுத்துவதற்காக வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கும் இந்தியாவின் M/s Shreeji Shipping நிறுவனத்திற்கும் இடையில் நிலவும் உடன்படிக்கையை நீடித்தல்
- புத்தளம் துறைமுகத்தில் நங்கூரமிடும் கப்பல்களிலிருந்து லக்விஜய மின் நிலையத்தின் இறங்குதுறை வரை 2021/2022 மற்றும் 2022/2023 ஆண்டுகள் சார்பில் நிலக்கரி ஏற்றி இறக்கும் பொருட்டு இலகுரக படகுகளை பயன்படுத்துவதற்காக ஒப்பந்தத்தினை இந்தியாவின் M/s Shreeji Shipping நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் செப்ரெம்பர் மாதம் தொடக்கத்திலிருந்து நிலக்கரி ஏற்றி இறக்கும் பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் இலகுரக படகுகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு M/s Shreeji Shipping நிறுவனத்திற்கும் வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் நிலவும் உடன்படிக்கையினை மேலும் ஒரு (01) வருடத்தால் நீடிப்பதற்கு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.