• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான Mv.Ceylon Breeze மற்றும் Mv.Ceylon Princess ஆகிய உலர் மொத்த சரக்கு கப்பல்களை 2023 ஆம் 2024 ஆம் ஆண்டுகளில் சேவையில் ஈடுபடுத்துதல்
- 2023 மற்றும் 2024 ஆகிய காலப்பகுதியில் இந்த இரண்டு கப்பல்களையும் சர்வதேச வாடகை சேவையில் ஈடுபடுத்தும் பொருட்டு கால வாடகை அடிப்டையில் கப்பல்களை வாடகைக்கு வழங்குபவர் ஒருவரை அல்லது வர்த்தக முகாமையாளர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு கேள்வி கோரப்பட்டுள்ளது. இதன் பொருட்டு 09 கேள்விகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, அவற்றுல் 06 கேள்விகள் கால வாடகை அடிப்படையிலும் 03 கேள்விகள் வர்த்தக முகாமைத்துவத்தின் கீழும் முன்வைக்கப்பட்டுள்ளன. தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசுகளின் மீது நிதி ரீதியில் மிக அனுசரணையான விலையினை முன்வைத்துள்ள கேள்விதாரரான M/s Coral Energy DMCC நிறுவனத்திற்கு மேற்குறிப்பிட்ட 02 கப்பல்களையும் வாடகை அடிப்டையில் ஈடுபடுத்தும் ஒப்பந்தத்தினை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.