• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெதர்லாந்து இராச்சியத்தின் நிதியுதவியின் கீழ் வட மாகாணத்தில் சுகாதார விநியோக சேவையைப் பலப்படுத்துதல்
- "வட மாகாணத்தில் சுகாதார விநியோக சேவையைப் பலப்படுத்தும் கருத்திட்டம்" என்னும் கருத்திட்டத்திற்கான செலவின் 75 சதவீதத்தை நிதியிடுவதற்கு 45 மில்லியன் யூரோ கொண்ட கடன் தொகையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நெதர்லாந்தின் ING Bank N.V. என்னும் வங்கியுடன் உடன்டிக்கையொன்று செய்துகொள்ளப்பட்டுள்ளது. மீதி 25 சதவீதம் கொண்ட கருத்திட்ட செலவினை நெதர்லாந்து அரசாங்கத்தின் Invest International Public Programmes B.V. என்பதன் மூலம் கொடையொன்றாக நிதியளிக்கப்படவுள்ளது. ஏற்கனவே கருத்திட்டத்தின் பௌதிக முன்னேற்றமானது சுமார் 92 சதவீதமாகும். இலங்கையின் பொருளாதார நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கடன் தொகையின் சுமார் 10 சதவீதத்தை குறைத்து கருத்திட்டத்திற்காக வழங்கப்படும் கொடையினை 35 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பொருட்டு உரிய திருத்தங்ளை உள்ளடக்கி நெதர்லாந்து அரசாங்கத்தின் Invest International Public Programmes B.V. மற்றும் நெதர்லாந்தின் ING Bank N.V. என்னும் வங்கி ஆகியவற்றுடன் இணக்கப்பாட்டு உடன்டிக்கையொன்றைச் செய்துகொள்ளவேண்டியுள்ளது. அதற்கிணங்க, குறித்த உடன்டிக்கையினைச் செய்துகொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.