• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிரேட்ட பயிற்றுவிக்கும் சடத்தரணிகளினது கெளரவிப்பு ஒப்புதல் சட்டம்
- சட்டத்துறையில் சிசேட்ட மதியுரை சட்டத்தரணிகள் பேணிவரும் உயர் தரத்தின் சிறப்பினை அங்கீகரிப்பதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சட்டமூலமொன்றை வரையும் பொருட்டு 2023‑01‑30 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சிரேட்ட பயிற்றுவிக்கும் சடத்தரணிகளினது கெளரவிப்பு ஒப்புதல் சட்டமூலமானது சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.