• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்திற்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள்
- நிலைபேறுடைய பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் மாற்றமடையக்கூடிய மற்றும் முகங்கொடுக்கும் ஆற்றலுடனான வங்கித்துறையொன்றைச் நடாத்திச் செல்லும் முக்கியத்துவத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்தை திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இனங்காணப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்தை திருத்துவதற்கான சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.