• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்தியம் சார் விரிவாக்கப்பட்ட பொருளாதார பங்குடமை பற்றிய உடன்படிக்கையுடன் இணைதல்
- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் 10 உறுப்பு நாடுகள் மற்றும் இந்த சங்கத்தின் நாடுகளுடன் ஏற்கனவே சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளைச் செய்துகொண்டுள்ள பிராந்திய நாடுகளான அவுஸ்திரேலியா, சீனா, யப்பான், தென்கொரியா மற்றும் நியூசிலாந்து போன்ற 05 நாடுகள் இணைந்து செயற்படுத்தும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது பிராந்தியம்சார் விரிவாக்கப்பட்ட பொருளாதார பங்குடமை பற்றிய உடன்படிக்கையாக அழைக்கப்படுகின்றது. இந்த உடன்படிக்கையுடன் இணைவதன் மூலம் இலங்கைக்கு பொருளாதார ரீதியிலும் அதேபோன்று ஏனைய பல நன்மைகளையும் பெற்றுக் கொள்வதற்கு சாத்தியம் நிலவுகின்றது. இதற்கிணங்க, பிராந்தியம் சார் விரிவாக்கப்பட்ட பொருளாதார பங்குடமையுடன் இணைவதற்கு முறையான அபிப்பிராய வௌிப்படுத்தல் கடிதமொன்றை தொடர்புபடுத்துவதற்கு சனாதிபதியின் செயலாளருக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.