• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உலக வங்கியின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளல்
- 2023 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டுவரையிலான 02 வருட காலப்பகுதியின் சார்பில் அபிவிருத்தி கொள்கை நிதியிடல் வசதியின் கீழ் உலக வங்கியின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டிலான கலந்துரையாடல்கள் 2023‑05‑17 ஆம் திகதியன்று நடாத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு சார்பில் 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு சமமான விசேட எடுத்தல் உரிமை 371.2 மில்லியனை 02 தவணைகளில் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச நிதி வசதிகள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உடன்பாடும் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் உடன்பாடும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கிணங்க குறித்த நிதி வசதியினைப் பெற்றுக் கொள்வதற்குரியதாக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சமவாயத்துடன் உடன்டிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.